பிரித்தானியாவில் 8 வயது சிறுமி மற்றும் தந்தையின் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்: ஒருவர் கைது
பிரித்தானியாவின் (UK) மேற்கு லண்டன் பகுதியில் 8 வயது சிறுமி மற்றும் அவரின் தந்தையின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு லண்டனில் நடந்த குறித்த இரட்டை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், சந்தேக நபரான 32 வயது நபர் ஒருவர் கொலை முயற்சி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு லண்டனில் லாட்ப்ரோக் குரோவ் (Ladbroke Grove) பகுதியின் தெற்கு வரிசையில் மாலை 5:30 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
பலத்த காயங்கள்
இதில், 8 வயது சிறுமி மற்றும் அவரது 34 வயது தந்தை பலத்த காயமடைந்துள்ள நிலையில் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதுடன், அவர் குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, அவரது தந்தைக்கும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் தொடர்புற்றிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் கென்சிங்டனைச் சேர்ந்த 32 வயதான ஜாஸ் ரீட் என்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதற்கமைய, கைதான நபர் மீது கொலை முயற்சி மற்றும் துப்பாக்கி, வெடிமருந்து வைத்திருந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அத்துடன், மெட்ரோ பொலிட்டன் பொலிஸின் சிறப்பு குற்றப்பிரிவு இந்த வழக்கு தொடர்பான விசாரணகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் சந்தேக நபர் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைபடுத்தப்பட உள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
