பலப்பிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு: ஒருவர் பலி
அம்பலாங்கொடை பலப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
பலப்பிட்டி வைத்தியசாலைக்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அம்பலாங்கொட கலகொட பிரதேசத்தைச் சேர்ந்த மதுர கசுன் குணதிலக்க என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
தப்பிச் சென்ற துப்பாக்கிதாரிகள்
ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளனர்.
கடந்த ஐந்து வார காலப் பகுதியில் அம்பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற ஐந்து துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
பழிவாங்கும் நடவடிக்கை
அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
ரி56 ரக துப்பாக்கியில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.