இரு வெவ்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு! இருவர் பலி
இலங்கையின் பல பகுதிகளில் நாளுக்கு நாள் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.
அவற்றில் அண்மைக்காலமாக பல துப்பாக்கி சூட்டு சம்பவங்களும் பதிவாகிவருகின்றது. இன்று (22.05.2023) காலி மற்றும் மினுவாங்கொடை பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
காலி
காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஏழு பிள்ளைகளின் தந்தையான வயோதிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தேங்காய் வியாபாரியான குறித்த நபர், இன்று (22.05.2023) காலை வீதியோரத்தில் தேங்காய்களை விற்றுக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது 68 வயதான தேங்காய் வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மினுவாங்கொடை
மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (22.05.2023) பிற்பகல் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற குறித்த நபர் மீது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த அடையாளந்தெரியாத நபர்கள் இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது முச்சக்கரவண்டி சாரதியான 27 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |