துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி! இரு சிறுவர்கள் வைத்தியசாலையில்
அஹுங்கல்ல மித்தரமுல்ல பிரதேசத்தில் இன்று (14) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத இருவர், மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி சிகிச்சைக்காக பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
சாரதி சுடப்பட்டதை அடுத்து மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும் அதில் பயணித்த இரண்டு சிறுவர்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் அஹுங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவர் என்பதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.