சந்திரிக்காவின் வீட்டில் இரகசியமாக நுழைந்த இளைஞன் மீது துப்பாக்கிச்சூடு
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு சொந்தமான ஹொரகொல்ல வளவே தோட்டத்தில் தேங்காய் திருட முற்பட்ட ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் காணி காவலாளிகள் இருவரை துப்பாக்கிகளுடன் நிட்டம்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நிட்டம்புவ ஹொரகொல்லாகம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வட்டுபிட்டியல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசாரணையில் வெளியான தகவல்
இதனையடுத்து அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அணு ஆயுதத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா முற்றிலும் தயார்... புடினுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri

Jaffnaவில் உள்ள நல்லூர் முருகன் கோவிலுக்கு தனது மகளுடன் சென்றுள்ள தமிழ் சினிமா பிரபலம்... யார் பாருங்க Cineulagam
