குருநாகல்- வெல்லவ பகுதியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கிச்சூடு!
குருநாகல்- வெல்லவ பகுதியில் பெண் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று (23.6.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் படுகாயமடைந்த பெண் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
துப்பாக்கிச் சூடு
அத்தோடு, குறித்த பெண்ணுடன் நெருங்கிய உறவில் இருந்ததாக கூறப்படும் நபரே, இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

பொலிஸ் விசாரணைகளின்படி, சந்தேக நபர் வீட்டின் அருகிலுள்ள காட்டுப் பகுதியில் மறைந்திருந்து இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மேலும்,சம்பவம் தொடர்பாக வெல்லவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam