மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி
மினுவாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் 2 மகன்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (06) காலை 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டிலேயே இவ்வாறு மூவரும் உயிரிழந்துள்ளனர்.
T56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், தந்தை மற்றும் இரண்டு மகன்கள் சுடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறு
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சிலரே இதனை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இரு மகன்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
