கொழும்பில் துப்பாக்கிச் சூடு
கொழும்பு – கிரான்பாஸ் – நவகம்புர பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
”மன்ன கண்ணா” என்றழைக்கப்படும் மாரிமுத்து கணேசராஜா என்ற பாதாள உலக உறுப்பினர் ஒருவர் மீதே, அடையாளம் தெரியாதநபர்கள் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நபர், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான நபர், பாதாள உலக குழுவின் உறுப்பினரான கஞ்சிபானி இம்ரானின் தந்தை மீது தாக்குதல் நடத்திய பிரதான சந்தேகநபர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கி பிரயோகத்தை நடத்திய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை கிரான்பாஸ் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
