தப்பிச் செல்ல முயன்ற சாரதி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
பொலிசாரின் உத்தரவை அலட்சியம் செய்து தப்பிச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்று (14.06.2023)அதிகாலை 3.00 மணியளவில் றம்புக்கணை, போலகம, கொட்டகம சந்தியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிள் சாரதியின் இடது பாதம் மற்றும் இடது கையில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்துள்ளது.
கேகாலை மருத்துவமனையில் அனுமதி
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த சந்தேகநபரை கேகாலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக பொலிசார் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் சந்கேத நபர் றம்புக்கணை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், தப்பி செல்ல முயன்றதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |