கோட்டாபயவின் வீட்டினருகே நடக்கவிருந்த அசம்பாவிதம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான, ஜெஸ்வெல் பிளேஸ் சந்தியில் தமது கைத்துப்பாக்கியால் சக பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயன்ற குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிரிஹான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இந்த பொலிஸ் அதிகாரி, பழைய கொட்டாவ வீதியில் உள்ள ஜெஸ்வெல் சந்தியில் மற்றுமொரு கான்ஸ்டபிள் மற்றும் சார்ஜன்ட் ஆகியோருடன் வீதியோரத்தில் கடமையில் ஈடுபட்டிருந்ததாக மிரிஹான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரான உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருந்த போது உறங்கிவிட்டதாகவும், பொலிஸ் சார்ஜன்ட் அவருக்கு கடமையில் அக்கறையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மூத்த அதிகாரியிடமிருந்து இத்தகைய வார்த்தைகளை கேட்டதால் பொறுமை இழந்த பொலிஸ் உத்தியோகத்தர், சார்ஜன்டை நோக்கி தனது ரி 56 ரக துப்பாக்கியில் குறிவைத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: உடலை பரிசோதித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
