கண்டுக்கொள்ளப்படாத தென்னிலங்கை குற்றவாளிகள்! வடக்கை குறி வைக்கும் இராணுவம்
தற்போது நாட்டின் தெற்கு பகுதியில் அதிகளவு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெறும் போது வடக்கில் எதற்கு இத்தனை இராணுவம் என சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,தெற்கிலே அதிகளவு துப்பாக்கிச் சூடு இடம்பெறுகின்றது.
ஆனால் வடக்கு- கிழக்கில் அந்தளவிற்கு எந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் இடம்பெறவில்லை. இருப்பினும் வடக்கில் எதற்காக இவ்வளவு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தில் வாழ்கின்றனர்.
அவர்களில் பலருக்கு நன்றாக துப்பாக்கிச் சூட்டை மேற்கொள்ள முடியும். ஆனால் அவர்கள் யாரும் வன்முறை மற்றும் ஆயுத கலாசாரத்தில் ஈடுபடவில்லை.''என கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்...,





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri

பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
