படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா.. சிசிடிவியில் சிக்கிய நபர்!
புதிய இணைப்பு
மாளிகாவத்தையில் சற்று முன்னர் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியமை காணொளியில் பதிவாகியுள்ளது.
குறித்த நபர், துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மூன்றாம் இணைப்பு
மாளிகாவத்தையில் உள்ள பிசிசி பாலம் அருகே சற்று முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர், கஞ்சிபானி இம்ரானின் மாமா என தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டாம் இணைப்பு
மாளிகாவத்தையில் உள்ள பி.சி.சி பாலம் அருகே சற்று முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதாள உலகத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலாம் இணைப்பு
கொழும்பு - மாளிகாவத்தை பிசிசி பாலம் அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் உயிரிழந்தவர் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
YOU MAY LIKE THIS..