கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
புதிய இணைப்பு
கொழும்பு - தலங்கம, ரொபர்ட் குணவர்தன மாவத்தையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்.
முதலாம் இணைப்பு
கொழும்பு - தலங்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் படுகாயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இன்று (25.08.2023) காலை தலங்கம, ரொபர்ட் குணவர்தன மாவத்தையில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
மேலதிக விசாரணை
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் கோரம்பே பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இந்நிலையில் படுகாயமடைந்த நபர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டை நடத்தியவரும் அவருடைய நண்பர்களும் குறித்த பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri