வாகரையில் துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் கைது
மட்டக்களப்பு(Batticaloa) மாவட்டத்தின் வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதோடு அதளை வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வாகரை அம்மந்தன்வெளி பகுதியிலிருந்து இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
ஒருவர் கைது
உள்நாட்டு தயாரிப்பான இந்த துப்பாக்கியை வைத்திருந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவரையும் கைது செய்துள்ளதுள்ள விசேட அதிரடிப்படையினர் அவரை வாகரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |