வன்னி பாடசாலைகளிலுள்ள வளக்குறைகளைச் சுட்டிக்காட்டிய ரவிகரன் எம்.பி
பாடசாலைகளுக்கான வளங்களைப் பகிரும்போது அனைத்துப் பாடசாலைகளுக்கும் வளங்களை சமமாகப் பகிருமாறும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று(17.12.2024) சர்வதேச இறையாண்மை பிணைமுறி மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையிற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“பாடசாலைகளுக்கு வளங்கள் சமத்துவ அடிப்படையில் பகிரப்படவேண்டும். இன்னமும் வன்னிமாவட்டத்தின் பல பாடசாலைகளில் இலத்திரனியல் வளப்பட்ட வளநிரப்பல் போதுமான அளவில் இல்லை. வன்னியில் முல்லைவலயம் மற்றும், மன்னார் வலயங்களில் கணனி வள நிலையம் இல்லை.
முழுமையான வளங்கள்
பாடசாலைகளில் சுகாதாரப் பணியாளர்கள் போதுமான அளவில் இல்லை. அந்தவகையில் கல்விசாரா ஊழியர்கள், பாடசாலைப் பணியாளர், இரவுநேரக் காவலாளி இப்படியான தேவைகள் உள்ளன.
குறிப்பாக வன்னியில் போதுமான நிதியிடல் இல்லை. இன்றளவும் முல்லைத்தீவுக் கல்வி வலயத்தில் ஒரு கணனியுடன் இயங்கும் பாடசாலைகள் உள்ளன.
அதேவேளை, மாணவர்களிடையே விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் வகையிலான முழுமையான வளங்கள் வழங்கப்படவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
