நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதி மீது துப்பாக்கி சூடு
ஹம்பாந்தோட்டையில் வீதியில் பயணித்த தம்பதி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
மித்தெனிய, கல்பொத்தாய - ஜுலம்பிட்டிய வீதியில் 06 ஆம் மைல்கல் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி சூடு
மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மோட்டார் சைக்கிள் சாரதி காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் மோட்டார் சைக்கிளின் பின்னால் சென்ற பெண்ணும் காயமடைந்துள்ளார்.
இவர்கள் மித்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri
84 நாட்கள் பிக்பாஸ் 9 வீட்டில் விளையாடியதற்காக கனி வாங்கிய சம்பளம்... எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam