முல்லைத்தீவு - வலைஞர்மடத்தில் மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் (Photos)
முல்லைத்தீவு - வலைஞர்மடம் பகுதியில் உள்ள வயல்காணி ஒன்றில் 4500 T- 56 வகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
கிறிஸ்தவ தேவாலய வீதியிலுள்ள குறித்த வயல் காணியில் இன்று (27.12.2023) மண்ணை அகழ்ந்தெடுக்கும் போது துப்பாக்கி ரவை பெட்டிகள் இருந்ததனை காணி உரிமையாளர் அவதானித்துள்ளார்.
மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள்
தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து முல்லைத்தீவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து துப்பாக்கி ரவைகளை மீட்டெடுத்துள்ளனர்.
T-56 வகை துப்பாக்கி ரவைகள் அடங்கிய ஆறு பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 4500 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த துப்பாக்கி ரவைகள் முல்லைத்தீவு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
