மட்டக்களப்பில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஆயுதங்கள் மீட்பு
மட்டக்களப்பு நகர் பிரதேசத்தில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ரி.56 ரக துப்பாக்கி ஒன்று மற்றும் ரவைகள், மகசீன் என்பவற்றை விசேட அதிரடிப்படையினர் மீட்டு ஒப்படைத்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார்.
குறித்த நடவடிக்கை நேற்று(01) முன்னெடுக்கப்ட்டுள்ளது.
மீட்கப்பட்ட ஆயுதங்கள்
லயன்ஸ் கிளப் வீதியில் உள்ள காணி ஒன்றில் புதிதாக வீடு கட்டுமானப்பணி இடம்பெற்று வருகின்ற நிலையில் சம்பவ தினமான நேற்று இரவு 10.00 மணியளவில் அங்கு மலசல கூடத்திற்கு குழி அமைப்பதற்கான நிலத்தை தோண்டும் போது புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் துப்பாக்கி இருப்பதை கண்டு விசேட அதிரடிப்படையினருக்கு அறிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் 50 துப்பாக்கி ரவைகள், 2 மகசீன்களை மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட ஆயுதங்களை ஒப்படைத்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri