அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்யும் வளைகுடா நாடுகள்
ஈரானுடனான தற்போதைய மோதல் சூழல், அமெரிக்காவுடனான தங்களின் நீண்டகால பாதுகாப்பு உறவுகளை வளைகுடா நாடுகள் மீண்டும் ஒருமுறை ஆராய வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளதாக அரபு வளைகுடா நாடுகளின் நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த அறிஞர் உசேன் இபிஷ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் படைகளுக்குத் தளம் அமைத்துக் கொடுத்த பின்னரும், சவூதி அரேபியா, கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகள் ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சவூதி மீதான 2019 தாக்குதல்
அமெரிக்காவின் பாதுகாப்பு கூட்டாளியாக இருப்பதால் தங்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு என்பது நடைமுறையில் வெறும் அனுமானமாகவே உள்ளது என்றும், சவூதி மீதான 2019 தாக்குதல் மற்றும் அமீரகம் மீதான ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை அமெரிக்காவால் தடுக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், வொஷிங்டனின் ஈரானுக்கு எதிரான தீவிரக் கட்டுப்பாட்டு உத்திகளில் இணைவது தங்களுக்குப் பாதுகாப்பைத் தராது என்பதை உணர்ந்துள்ள வளைகுடா நாடுகள், தற்போது மிகவும் எச்சரிக்கையான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றன.
ஈரானின் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இடைக்கால அரசை வழிநடத்தத் தயார்! இளவரசர் ரெசா பஹ்லவி அதிரடி அறிவிப்பு
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri