ஏழு நாட்களில் 7 உலக அதிசயங்களை பார்வையிட்ட நபர் : முறியடிக்கப்பட்ட கின்னஸ் சாதனை
உலகில் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட ஏழு உலக அதிசயங்களை எகிப்தியர் ஒருவர் ஏழு நாட்களில் சென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் 45 வயதான மக்டி ஈசா (Magdy Eissa) என்பவரே இவ்வாறு உலக சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் இந்த சாதனை பயணத்தை 6 நாட்கள் 11 மணி நேரம் 52 நிமிடங்களில் வெற்றிகரமாக முடித்துள்ளார்.
சாதனைப் பயணம்
இந்த கின்னஸ் உலக சாதனைப் பயணத்தின் காணொளியை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சீனப் பெருஞ்சுவருடன் தொடங்கிய இந்தப் பயணம், இந்தியாவின் தாஜ்மஹால், ஜோர்டானில் உள்ள பண்டைய நகரமான பெட்ரா, ரோமில் உள்ள கொலோசியம், பிரேசிலில் உள்ள கிறிஸ்ட் தி ரிடீமர், பெருவில் உள்ள மச்சு பிச்சு ஆகிய இடங்களைப் பார்வையிட்டுள்ளார்.

மேலும் இவர் அனைத்து இடங்களுக்கும் செல்ல பொதுப் போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்தியதாக கூறியுள்ளார்.
புதிய ஏழு அதிசயங்களைப் பார்வையிட்டு உலக சாதனையை முறியடிப்பதன் மூலம் தனது சிறுவயது கனவை நிறைவேற்றிகொண்டதாக ஈசா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri