பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள்
பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார்.
அதன்படி, சோதனை முடிவுகளைப் பெற்றுக்கொள்ளும் வரை பொதுமக்கள் தம்மை தாமே சுயமாக தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை முடிவுகளை பெற 2 - 3 நாட்கள் ஆகலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வீட்டில் மற்றவர்கள் இருந்தால் பி.சி.ஆர் சோதனைக்குப் பிறகு சுயமாக தனிமைப்படுத்தும்போது வீட்டில் கூட முகக்கவசங்களை அணியுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பி.சி.ஆர் சோதனையில் முடிவு கிடைக்கும் வரை அவர்கள் வீட்டில் தனித்தனி பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஓய்வெடுக்கவும், நிறைய தண்ணீர் குடிக்கவும், பொறுப்புடன் செயல்படவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
பல இடங்களில், பி.சி.ஆர் சோதனை முடிவுகளைப் பெறும்போது சிக்கல்கள் இருப்பதாக பொது சுகாதார அதிகாரிகள் முன்னதாக சுட்டிக்காட்டியிருந்தனர்.
பி.சி.ஆர் சோதனைக்கு பின்னர் கிட்டத்தட்ட 2 அல்லது 3 நாட்களேயே முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
இந்தநிலையில் சோதனை செய்வதற்கும் வெளியிடுவதற்கும்
இடையிலான இடைவெளியில் வைரஸ் அதிகமானோருக்கு பரவக் கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
