மீண்டும் ஜீ.எஸ்.டி வரி
பொருட்கள் மற்றும் சேவை வரியை (GST) மீண்டும் அறிமுகப்படுத்தும் யோசனை இன்றைய தினம் அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இதனை தவிர தற்போது 15 சத வீதமாக இருக்கும் பெறுமதி சேர் வரியை (VAT) 18 சத வீதமாக மேலும் மூன்று வீதத்தில் அதிகரிக்கும் யோசனையும் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa) அமைச்சரவைக்கு இந்த யோசனையை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) பதவிக்கு வந்த பின்னர், வரி விதிப்புகள் சிலவற்றை தளர்த்தினார், இதன் காரணமாக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டதுடன் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிக்கு இதுவும் ஒரு காரணம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.
இப்படியான சூழ்நிலையிலேயே மீண்டும் பெறுமதி சேர் வரியை அறிமுகப்படுத்தும் யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam