ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை நிறுத்தப்பட்டால் அதனை எதிர்கொள்ள தயார்! அரசாங்கம் சவால்
ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை நிறுத்தப்பட்டால் அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை தொடர்ந்து வழங்குவது குறித்து மீள பரிசீலனை செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் பிரேரணை தொடர்பில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
எமது நாடுக்கு கிடைக்கப்பெற்றுவரும் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை நிறுத்தமாறு தெரிவிக்கும் பிரேரணை ஒன்று ஐராேப்பிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
அவ்வாறு நிறுத்தப்பட்டால், அதற்கு முகம்கொடுப்பதற்கு அரசாங்கம் என்றவகையில் நாங்கள் முகம்கொடுப்போம். ஏனெனில் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை மூலம் நாட்டுக்கு கிடைப்பது நூற்றுக்கு 3வீதமான நிவாரணமாகும்.
என்றாலும் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன குறித்த நாடுகளுடன் தற்போதும் நீண்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றார்.
கடந்த அரசாங்கம் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை பெற்றுக்கொண்டது, அந்த நாடுகளின் பல்வேறு நிபந்தனைகளுக்கு கீழ்ப்படிந்தாகும்.
மேலும் வெளிநாடுகளின் நிபந்தனைகளுக்கு கீழ்ப்படிவதற்கு ஆளும் அரசாங்கத்துக்கு மக்களின் ஆணை கிடைக்கவில்லை. நாட்டின் சுயாதீனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த நிபந்தனைகளுக்கும் இந்த அரசாங்கம் கீழ்ப்படியப்போவதில்லை.

ஆசிய நாடுகள் உட்பட... சில நாட்டவர்களின் விசா அனுமதியைக் கட்டுப்படுத்த பிரித்தானியா முடிவு News Lankasri
