கிளிநொச்சியில் பெண்ணொருவருடன் தகாத முறையில் நடக்க முற்பட்ட கிராம அலுவலர்
கிளிநொச்சி - கண்டாவளைப் பிரதேசத்தில் படிவம் ஒன்றுக்கு கிராம அலுவலரின் உறுதிப்படுத்தலுக்கு சென்ற பெண் ஒருவருக்கு குறித்த கிராம அலுவலரால் தகாத வார்த்தைகளுடாக துன்புறுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி, கண்டாவளை பிரதேத்தில் கடமையாற்றும் கிராம அலுவலர் ஒருவரிடம் படிவம் ஒன்றிற்கு கையொப்பமிடுவதற்கு சென்ற இளம் பெண்ணிடம் தொலைபேசி இலக்கத்தைப் பெற்று அதன் பின்னர் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு தகாத வார்த்தைகளால் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கிராம அலுவலர் மீதான விசாரணை
அத்துடன், இரவுநேரம் குறித்த பெண் இருந்த வீட்டுக்கு சென்று தகாத முறையில் நடக்க முற்பட்ட போது பெண்ணின் உறவினர்களால் அடித்து விரட்டப்பட்டுள்ளார்.

இதேவேளை, பிரதேச செயலக கடமை நேரத்தில் பிரபல பாடசாலை ஒன்றுக்குள் சென்று ஆசிரியர்கள் மீது தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டமைக்கு அவருக்கு எதிராக குறித்த பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களால் முறைப்பாடு செய்யப்பட்டு பொலிஸார் விசாரணை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri