நாட்டிற்கு அதிகளவு வருகை தரும் சுற்றுலா பயணிகள்
இலங்கைக்கு, இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் 7,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோவிட் காரணமாக சரிவடைந்த சுற்றுலாத்துறை இப்போது படிப்படியாக மீண்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் மொத்தம் 45,413 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.அவர்களில் 7,096 பேர் அக்டோபர் 01 முதல் அக்டோபர் 13 வரை வருகை தந்துள்ளனர்.
இவர்கள், இந்தியா, கஸகஸ்தான், ஜெர்மனி, யுக்ரைன், அமெரிக்கா, சீனா, கனடா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்களாவர்.
இதேவேளை, பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதற்கான போக்கு அதிகரித்து வருவதாக சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நாட்டிற்கு அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்க தேவையான விளம்பர திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மரண வீட்டில் அரசியல்.. 3 நாட்கள் முன்
Bigg Boss: உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது? மைக்கை மறைத்து பண்ணாதீங்கனு... கொந்தளித்த பிக்பாஸ் Manithan
இலங்கையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள்: பல கோடி மதிப்பிலான காணியை வழங்கிய நன்கொடையாளர் News Lankasri