சஜித்தின் தலைமைக்கு வலுக்கும் எதிர்ப்பு : ரணிலுடன் கைகோர்க்கவுள்ள பலர்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) செயற்பாடுகள் காரணமாக அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் அதிருப்தியுற்றுள்ளனர்.
கடந்த காலங்களில் சிறீலங்கா பொதுஜன பெரமுன, சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் அரசியல்வாதிகள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து செயற்பட்டிருந்தனர்.
அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கத் தயார்
எனினும் அண்மைக்காலமாக சஜித் பிரேமதாச தமக்கான முக்கியத்துவத்தை வழங்குவதில்லை என்று குறித்த அரசியல்வாதிகள் மத்தியில் பரவலான அதிருப்தியொன்று தலைதூக்கியுள்ளது.
அதே நேரம் ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்த மற்றும் முக்கிய தலைவர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அதே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தும் விலகி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |