விடுதியொன்றில் பெட்ரோல் குண்டு தாக்குதலை நடத்த இரகசிய திட்டம! சுற்றிவளைத்த பொலிஸார்
சீதுவையில் உள்ள விடுதியொன்றில் பெட்ரோல் குண்டு தாக்குதலை நடத்த தயாராக இருந்ததாக கூறப்படும் கும்பலொன்று கைது செய்யப்பட்டுள்ளது.
மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு நடத்திய சோதனையில் 06 சந்தேகநபர்கர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இவர்களிடமிருந்து 06 பெட்ரோல் குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் நிறுவனமொன்றின் மேலாளர், ஒரு தொழிலதிபர், மூன்று முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றொரு நபரும் அடங்குவதாக கூறப்படுகின்றது.
மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்பேதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட முகாமையாளருக்கு எதிராக முன்னதாக நீர்கொழும்பு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள இரண்டு வழக்குகள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.