தம்பலகாமம் இடைத்தங்கல் முகாமுக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர்கள் குழு
திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட பாலம்போட்டாறு தி/விநாயகர் தமிழ் வித்தியாலயத்தில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் உள்ள மக்களை அமைச்சர்கள் கொண்ட குழுவினர் சந்தித்துள்ளனர்.
குறித்த கண்காணிப்பு விஜயம் நேற்றையதினம் (29.11.2024) இடம்பெற்றுள்ளது.
அனர்த்த கிராமிய மட்ட முன்னெடுப்புக்கள், நீர் வடிந்தோடக்கூடிய வழிவகைகள் தொடர்பிலும் இடைத்தங்கல் நிலையத்தில் தங்கியிருந்த பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் தொடர்பிலும் இதன்போது அமைச்சர்கள் கேட்டறிந்து கொண்டனர்.
அமைச்சர் குழு
குறித்த அமைச்சர் குழுவில் கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி உப்பாலி பன்னலகே, வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குமார குணசேன ஆகியோர்கள் இடம்பெற்றிருந்தனர்.
மேலும், தம்பலகாமம் பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர் சித்திக், பாலம்போட்டாறு கிராம சேவகர் பிரிவின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தங்கரூபன் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
