பாலியல் ரீதியான துன்புறுத்தல் முயற்சியை துணிச்சலாக எதிர்கொண்ட வெளிநாட்டு பெண்!
கண்டியில் வெளிநாட்டு பெண் ஒருவரை உள்ளூர்வாசிகள் குழுவொன்று பாலியல் ரீதியாக துன்புறுத்த முற்பட்ட சம்பவம் காணொளியில் பதிவாகியுள்ளது.
இந்த தகவலை கொழும்பின் ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
எனினும் சம்பவம் எப்போது இடம்பெற்றது என்ற தகவலை ஊடகம் வெளியிடவில்லை.
இதனையடுத்து தன்னைத் துன்புறுத்த முற்பட்ட குழுவினர் வெளிநாட்டு பெண் எதிர்கொள்ள முற்பட்டபோது அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் அவருடன் சென்ற மற்றொரு வெளிநாட்டவரின் காணொளியில் பதிவாகியுள்ளது.
இந்தநிலையில் சம்பவத்தின் பின்னர் கருத்துரைத்துள்ள குறித்த பெண்,இது தமக்கு இடம்பெற்ற முதல் சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் திருகோணமலையில் இரண்டு பெண்கள் எதிர்கொண்ட பிரச்சினையை தாம் கண்டதாகவும் அதேபோன்று தமக்கு நடக்கும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் வெளிநாட்டு பெண் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது குறித்து எமது செய்திச்சேவை கண்டி சுற்றுலா பொலிஸில் வினவியபோது, தமக்கு இது தொடர்பாக முறைப்பாடுகள் எவையும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.