யாழில் சிங்களவர்கள் வாழ முடியாதா! திட்டமிட்டு இனவாதத்தை தூண்டும் குழு
யாழ்.சாவகச்சேரி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கின்ற சிங்களவர்களுக்கு எதிராக அந்தப் பிரதேச சபையின் உபதவிசாளர் செயற்படுவதாக ஒரு குழுவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நேற்றையதினம்(22) யாழ்.சாவகச்சேரி பகுதியிலிருந்து ஒரு குழுவினர் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று ஜனாதிபதியிடம் கடிதம் ஒன்றை வழங்க வேண்டும் என கூறி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
தையிட்டி விகாரை விவகாரத்திலும், குருந்தூர் மலை விவகாரத்திலும், கொழும்பில் நடைபெற்ற தமிழர்களின் நினைவேந்தலில் குழப்பத்தை ஏற்படுத்திய குழுவினரே ஜனாதிபதி அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.
அத்தோடு, குறித்த குழுவினர் சாவகச்சேரி பிரதேச சபையின் உபதவிசாளரை தமிழீழ விடுதலைப் புலி எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையிலே தான் தமிழீழ விடுதலைப் புலி இல்லை என பிரதேச சபையின் உபதவிசாளர் இராமநாதன் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல விடயங்களை ஆராய்கின்றது லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சி....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



