வவுனியாவில் இளைஞர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட குழு.. பொலிஸார் விசாரணை
வவுனியா - பெரியார்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது குழுவொன்று தாக்குதல் நடத்தியதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, குறித்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
பொலிஸில் முறைப்பாடு..
பெரியார்குளம் பகுதியில் 25 வயதான குறித்த இளைஞரை வழிமறித்த எட்டுபேர் கொண்ட குழு அவர் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடாத்தியுள்ளது.

இதனையடுத்து படுகாயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளார்.
குறித்த தாக்குதலினால் அவரது கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.