மட்டக்களப்பில் வீடு திரும்பிய முதியவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி..! சிசிடிவியில் சிக்கிய இருவர்
மட்டக்களப்பு நொச்சிமுனை பகுதியில் ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற திருவிழாவில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை தடுத்த முதியவரின் வீட்டுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் நேற்று (15) இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான தகவலின்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு குறித்த ஆலயத்தில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற போது அந்த முதியவர் கீழே விழுந்து தலையில் காயமடைந்துள்ளார்.
செல்வம் அடைக்கலநாதன் பொறுப்பில் இருக்கும் வரை ரெலோவை புறக்கணியுங்கள்! போர் கொடி தூக்கிய மூத்த உறுப்பினர்
பொலிஸார் விசாரணை
இந்நிலையில், சம்பவ தினமான நேற்று பகல் 12.00 மணியளவில், குறித்த முதியவர் மற்றும் அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு சமுர்த்தி காரியாலயத்திற்கு சென்றிருந்தனர்.
இதனை பயன்படுத்திக் கொண்ட இருவர் கூரிய ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்று, மதிலைக் கடந்து வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

பின்னர் வீட்டின் கதவை உடைத்து, யன்னல்கள் மற்றும் அலமாரி கண்ணாடிகளை உடைத்து பெரும் சேதம் விளைவித்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீடு திரும்பிய போது சேதத்தை கண்ட குடும்பத்தினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பல முறை முறைப்பாடுகள்
மேலும், அருகிலிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த நபர்கள் போதைப்பொருள் மற்றும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், பலமுறை கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்தவர்கள் எனவும் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இவர்கள் தொடர்ந்து வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாகவும், பல முறை முறைப்பாடுகள் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri
உலகக் கோப்பை நடுவர் செய்த கைசைகை., FIFA-விற்கு இனவெறி கண்காணிப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை News Lankasri