கோப் குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்
கோப் குழுவின் புதிய தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
கோப் குழு தலைவர்களுக்கான வாக்கெடுப்பில் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவுக்கு ஆதரவாக 15 வாக்குகள் கிடைக்கப்பெற்றதையடுத்து இவருடன் இப் பதவிக்கு முன்மொழியப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்னவுக்கு 7 வாக்குகள் கிடைக்கப்பெற்றன.
இவ்வாக்கெடுப்பின் பின்னர் இவர் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது சபையின் பொது அலுவல்கள் தொடர்பான நாடாளுமன்ற குழுவின் (கோப் குழு) தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கோப் குழுவின் முன்னாள் தலைவராக பேராசிரியர் சரித ஹேரத் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

புன்னகை பூவே தொடரை தொடர்ந்து முடிவுக்கு வரும் இன்னொரு சன் டிவி சீரியல்... ரசிகர்கள் வருத்தம் Cineulagam
