வளமான கிராமம் எனும் தொனிப்பொருளின் கீழ் பசுமை வீடு கையளிப்பு!
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு கிராமத்தில் வளமான கிராமம் எனும் தொனிப்பொருளின் கீழ் அமைக்கப்பட பசுமை வீடு (Greenhouse) விவசாய பண்ணை இன்று(10-03-2026) கையளிக்கப்பட்டுள்ளது.
கிராமிய அபிவிருத்தி சமுக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினதும் undp நிதி பங்களிப்பிலும் காலநிலைக்கு சீரமைவான விவசாய சமூகப் பண்ணை நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குறித்த பண்ணையானது இன்று பிற்பகல் 3 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பசுமை வீடு கையளிப்பு
கிராமிய அபிவிருத்தி சமுக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே கலந்து கொண்டு பிரமந்தனாறு கிராமத்தில் அமைக்கப்பட பசுமை வீடு (Greenhouse) கையளித்தார்.

இந்நிகழ்வில் வடமாகான ஆளுநர் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், கண்டாவளைப் பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri