நாட்டில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்படும்:விஜயதாச ராஜபக்ச
இன்னும் இரண்டு வாரங்களில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு முடிந்து பூஜ்ஜியமாகி, நாட்டிற்குள் மிகப் பெரிய பஞ்சம் ஏற்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச (Wijayadasa Rajapaksa) தெரிவித்துள்ளார்.
பன்னிப்பிட்டிய வீர மாவத்தையில் ஐக்கிய பொது சேவை சங்கத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று கலந்துக்கொண்ட போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.
அடுத்த சில வாரங்களில் அத்தியவசிய உணவு பொருட்களை விநியோகிக்க முடியாத நிலைமைக்கு அரசாங்கம் மாறும். இதனால், அடுத்த நாட்டிற்குள் கலவரமான நிலைமை ஏற்படும்.
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு பின்னர், பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் ஜனாதிபதியின் அடிமைகளாக மாறியுள்ளனர். தனி நபர் ஒருவர் நாட்டை ஆட்சி செய்யவே 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது எனவும் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ஏழு மூளைகளை கொண்ட நிதியமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக சமூகத்தில் பேசப்படுவதற்கு அமைய அவரால், நாட்டை கரை சேர்க்க முடியுமா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள விஜயதாச ராஜபக்ச, நிதியமைச்சர் ஏழாலாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றுள்ளதால், அவரை ஏழு மூளை கொண்டவர் கூறியிருக்கலாம் என தெரிவித்துள்ளார். நாட்டை கரை சேர்க்க அது போதுமானதல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
Red Card வாங்கி பிக்பாஸில் இருந்து வெளியேறிய கம்ருதீன், பார்வதி வாங்கிய சம்பளம்... யார் அதிகம் பாருங்க Cineulagam
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
Super Singer 11: இலங்கை குயிலுக்கு சரண் ராஜா கொடுத்த பரிசு... எமோஷ்னலில் ஒட்டுமொத்த அரங்கம் Manithan