நாடளாவிய ரீதியில் நடைபெற்ற பெரிய வெள்ளி சிலுவை வழிபாடுகள்
கிறிஸ்தவ பொதுமக்களின் தவக்காலத்தின் சிறப்பு நாளான பெரிய வெள்ளி நிகழ்வு இன்று (18) நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இந்தநிலையில், மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று காலை சிலுவைப் பாதை பாடுகளின் வழிபாடுகளில் உணர்வு பூர்வமாக பலத்த பாதுகாப்புடன் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை மட்டக்களப்பில் பழமை வாய்ந்த மரியாள் தேவாலயத்திலும் ஆலய பங்குத்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் தலைமையில் பெரிய வெள்ளி சிலுவை பாதை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
பெரிய வெள்ளி வழிபாடு
ஆலயத்தில் இருந்து ஆரம்பமான இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் ஆனது நகரின் பிரதான வீதிகள் ஊடாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
அத்தோடு, மட்டக்களப்பில் உள்ள சீயோன் தேவாலயத்திலும் தேவாலயத்தின் பிரதான போதகர் ரோஷான் மகேசன் தலைமையில் தலைமையில் பெரிய வெள்ளி சிலுவை பாதை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இயேசுபிரான் சிலுவையில் அடையப்பட்ட பாடுகளின் காட்சிகளும் இன்றைய பெரிய வெள்ளி வழிபாடுகளில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கிளிநொச்சி
பெரிய வெள்ளி பூசை வழிபாடுகள் மற்றும் சிலுவைப்பாதை வழிபாடுகள் கிளிநொச்சி மாவட்டத்திலும் தேவாலயங்களில் இன்று (18) சிறப்பாக இடம்பெற்றது.
இந்தநிகழ்வில் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
