கனடாவில் தமிழர் ஒருவருக்கு கிடைத்த பெரும் அதிஷ்டம்!
கனடாவில் வசிக்கும் தமிழர் ஒருவர் வாங்கிய லொட்டரி டிக்கெட் மூலம் இலங்கை மதிப்பில் சுமார் 1,62,51,236 ரூபாய் பணம் வென்றுள்ளார்.
கனடாவில் உள்ள மிசிசாகா பகுதியில் வசிக்கும் 59 வயதான கோபாலநாதன் சதாசிவம் என்பவருக்கே இந்த அதிஷ்டம் கிடைத்துள்ளது. இவர் வால்மார்ட்டில் உள்ள சீஎன்ஐபி கியோஸ்க்கில் ஒரு கனடிய டொலர் செலவு செய்து லொட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார்.
இந்நிலையில், அவர் வாங்கிய லொட்டரிக்கு சுமார் $100,000 கனடிய டொலர்கள் பரிசு தொகை கிடைத்துள்ளது. இலங்கை மதிப்பில் சுமார் 1,62,51,236 ரூபாய் பணத்தை அவர் வெற்றிபெற்றுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கோபாலநாதன் சதாசிவம்,
“இந்த நாளை என் வாழ்நாளில் மறக்க முடியாது என்று தெரிவித்தார். இந்த மகிழ்ச்சியான செய்தியை முதலில் எனது மனைவியிடம் கூறியதும் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். நாங்கள் இருவரும் எங்கள் குழந்தைகளிடம் கூறினோம். அவர்கள் எங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த பணத்தை வைத்து தனது சில கொடுப்பனவுகளை செலுத்த திட்டமிட்டுள்ளோம். மீதமுள்ள பணத்தை குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்ய உள்ளதாக கோபாலநாதன் சதாசிவம் தெரிவித்தார்.
மேலும் பாதுகாப்பான சூழல் நிலவும் பொழுது குடும்பத்துடன் விடுமுறைக்கு பயணம் செய்ய உள்ளதாகவும் அவர் புன்னகையுடன் தெரிவித்தார்.
கோபாலநாதன் சதாசிவம் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
