ரஷ்யாவின் கொடூர முகம் - கொத்துக் கொத்தாக மீட்கப்படும் சடலங்கள்
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்து Izyum புதைகுழியில் இருந்து 440 க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட உக்ரேனிய நகரமான Izyum இல் சுமார் 440 சடலங்கள் அடங்கிய வெகுஜன புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கார்கிவ் பிராந்தியத்திற்கான தலைமை பொலிஸ் புலனாய்வாளர் Serhii Bolvinov இதனை குறிப்பிட்டுள்ளார்.
போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்கள் சேகரிப்பு
ரஷ்ய போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை சேகரிப்பதற்காக, சட்டத்தரணிகள் மற்றும் பிற புலனாய்வாளர்களுடன் பாரிய பொலிஸ் முயற்சியின் ஒரு பகுதியாக அனைத்து உடல்களும் தோண்டி எடுக்கப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்படும் என்றார். உடல்கள் தனித்தனியாக தற்காலிக இடத்தில் புதைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
பல மாதங்களாக ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கார்கிவ் பிராந்தியத்தில் என்னென்ன குற்றங்கள் நடந்தன என்பதை விசாரிக்கத் தொடங்கியதில் இருந்து பல புதைகுழிகள் குறித்தும் காவல்துறை அதிகாரிகள் அறிந்துள்ளனர்.
ஆனால் இப்போது அந்த பகுதிகள் மீண்டும் உக்ரைன் கைகளுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு விடுவிக்கப்பட்ட நகரத்தில் 440 க்கும் மேற்பட்ட கல்லறைகளைக் கொண்ட மிகப்பெரிய புதைகுழிகளில் ஒன்று இருப்பதாக என்னால் கூற முடியும்.
விசாரணையின் போது காரணங்கள் கண்டறியப்படும்
சுமார் 440 உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் எப்படி இறந்தார்கள் என்று கூற முடியுமா என்று கேட்டதற்கு, "சிலர் கொல்லப்பட்டனர் [சுட்டுக் கொல்லப்பட்டனர்], சிலர் பீரங்கித் தாக்குதல்களால் இறந்தனர், சிலர் வான்வழித் தாக்குதல்களால் இறந்தனர் என்று அவர் பதிலளித்தார்.
மேலும் எங்களிடம் தகவல் உள்ளது. இன்னும் பல உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. எனவே விசாரணையின் போது இறப்புக்கான காரணங்கள் கண்டறியப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
திரு போல்வினோவ் தளத்தின் கண்டுபிடிப்பு தன்னை எவ்வாறு பாதித்தது என்பதை விவரித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
