வடக்கு மற்றும் கிழக்கில் ஆயர் மன்றம் உருவாகி வருகின்றமை மிகுந்த மகிழ்ச்சி! எம்.வி.ஈ.இரவிச்சந்திரன் அடிகளார்

Jaffna Northern province Eastern province University of jaffna
By Kanamirtha Jul 18, 2021 10:19 PM GMT
Kanamirtha

Kanamirtha

in சமூகம்
Report

வடக்கு, கிழக்கு ஆயர் மன்றம் மெதுமெதுவாக உருவாகி வருவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது என யாழ்.பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரீகத் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.வி.ஈ.இரவிச்சந்திரன் அடிகளார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான தனது அனுபவங்களை அவர் இவ்வாறு பகிர்ந்துக்கொண்டுள்ளார்.அவை பின்வருமாறு,

எட்டு ஆண்டுகளாக யாழ்ப்பாணம் மறை மாவட்டத்தின் அன்பியம்,பொதுநிலையினர், இளைஞர் ஆணைக்குழுக்களுக்கு இயக்குநராக பணியாற்றியுள்ளேன்.

அக்காலங்களில் பலதடவை மேற்படி குழு உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு கொழும்பு மற்றும் தெற்கின் பல்வேறு பகுதிகளுக்கும் தேசிய ஆணைக்குழுக் கூட்டங்களுக்குச் சென்றுள்ளேன். அக்கூட்டங்களுக்கு வரும் பெரும்பாலானவர்கள் சிங்கள மக்கள். கூட்டங்கள் பெரும்பாலும் சிங்கள மொழியிலேயே நடைபெறும்.

இங்கிருந்து பெரும் சிரமங்கள் மத்தியில் பயணம் செய்து அங்கு செல்லும் நாம் வெறும் பார்வையாளர்களாக இருந்து விட்டுத் திரும்பிய அனுபவங்களே அநேகம். அப்போதெல்லாம் வடக்குக் கிழக்குக்கென தனி ஆயர் பேரவை உருவானால் எவ்வளவு சிறப்பாக இருக்கும், தமிழில் கூட்டங்களை நடத்தி; திட்டங்களைத் தீட்டி செயற்படுத்தலாமேயென இதயம் ஏங்கும்.

அடிகளார் பற்றி

எம்.வி.ஈ.இரவிச்சந்திரன் அடிகளார் 1995 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்று குருநகர் புனித யாகப்பர் ஆலயம் - யாழ் புனித மரியன்னை பேராலயம் ஆகிய பங்குகளில் உதவிப் பங்குத்தந்தையாகவும், புனித அன்னாள் ஆலயம் பண்டியன்தாழ்வு - அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலயம் - சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயம் - நாவாந்துறை புனித மரியன்னை ஆலயம் - குருநகர் புனித யாகப்பர் ஆலயம் - புனித ஆசீர்வாதப்பர் ஆலயம் நல்லூர் - புனித திரேசம்மாள் ஆலயம் றக்கா றோட் ஆகிய பங்குகளில் பங்குப் பணியாற்றியுள்ளார்.

உரோமை உர்பன் பல்கலைக்கழகத்தில் இறையியல் இளங்கலமாணி மற்றும் முதுகலைமாணிப் பட்டங்களையும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தத்துவ முது கலைமாணிப்பட்டத்தையும் பெற்றவர்.

1997ஆம் ஆண்டு முதல் யாழ் பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரீகத் துறையின் விரிவுரையாளராக பணியாற்றி வரும் இவர் தற்போது யாழ் பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரீகத் துறையின் சிரேஸ்ர விரிவுரையாளராக தற்போது பணியாற்றி வருகிறார்.

1997ஆம் ஆண்டு முதல் புனித சவேரியார் குருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் 2012ஆம் ஆண்டு முதல் புனித யோசவ் வாஸ் இறையியல் கல்லூரியில் நிரந்தர விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகிறார்.

வடக்குக் கிழக்கு ஆயர் மன்றம்

இலங்கைத் தீவில் வடக்குக் கிழக்கில் காணப்படும் நான்கு மறை மாவட்டங்களையும் இணைத்த ஒரு ஆயர் மன்றம் ஒன்று உருவாக்கப்பட்டுக் கடந்த சில மாதங்களாக இயங்கி வருகின்றது. இத்தகைய ஆயர் பேரவையின் தேவை மற்றும் நியாயப்பாடு தொடர்பாகக் காலைக்கதிரின் கிறிஸ்தவ செய்தி இதழ் தொடர் கருத்துக்களை வழங்கி வருகின்றது.

அந்த வகையில் இவ்விதழில் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்.

ஆயர் பேரவை என்றால் என்ன?

கத்தோலிக்க திரு அவையின் இரண்டாம் ஆவியின் திருப்பொழிவு என அழைக்கப்படும் இரண்டாம் வத்திக்கான் சங்கமானது மூன்றாம் மிலேனியத்தில் கத்தோலிக்க திரு அவை பயணிக்க வேண்டிய வழித்தடங்களைத் திசை காட்டி நின்றது.

அந்தச் சங்கம் ஆயர் பேரவை என்றால் என்ன என்பதையும் அதன் நோக்கம் என்ன என்பதையும் பின்வருமாறு கூறுகின்றது.

“ஆயர் பேரவை என்பது ஒருவகைக் குழுவாகும். இக்குழுவின் மூலமாக ஒரு குறிப்பிட்ட நாட்டின் அல்லது நிலப்பரப்பின் ஆயர்கள் தங்கள் அருள் பணியை ஒருங்கிணைந்து செய்கின்றனர். குறிப்பாக, காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்ற திருத்தூதுப் பணி முறைகள், திட்டங்கள் வழியாகத் திருச்சபை மக்களுக்கு வழங்கும் மேலான நலன்களைப் பெருக்குவதே இப்பேரவையின் நோக்கமாகும்.” (ஆயர்களின் அருள் பணி எண். 38)

“மக்களின் அருள் வாழ்வு நலனைப் பேண மறை மாவட்டங்களுக்கு மட்டுமல்ல, மறை மாநிலங்களுக்கும் ஏற்ற எல்லைகள் தேவைப்படுகின்றன. உண்மையில் இது மறை மண்டலங்களை ஏற்படுத்தவும் தூண்டுதல் அளிக்கிறது. இங்ஙனம் சமூக, இடச் சூழ்நிலைகளுக்கேற்பத் திருத்தூதுப் பணித்தேவைகளைச் சிறந்த முறையில் நிறைவேற்ற இயலும்.” (ஆயர்களின் அருள் பணி எண். 39)

இச்சங்கத்தின் பின் உருவாக்கப்பட்ட திரு அவையின் சட்டக் கோவை பின்வருமாறு விளக்குகின்றது.

“ஆயர் பேரவை என்பது நிரந்தரமான ஓர் அமைப்பாகும். அது ஒரு நாட்டின் அல்லது ஒரு குறிப்பிட்ட எல்லையின் ஆயர்கள் குழுவாகும்; இதன் மூலம் ஆயர்கள் தங்கள் எல்லையைச் சார்ந்த கிறிஸ்தவ விசுவாசிகளுக்காகச் சில மேய்ப்புப் பணிகளை ஒருங்கிணைந்து செயலாற்றுகின்றனர். காலம் மற்றும் இடத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்றத் திருத்தூதுப் பணி முறைகள், திட்டங்கள் வழியாக, சட்டத்தின் விதிமுறைக்கேற்பத் திருச்சபை மக்களுக்கு வழங்கும் மேலான நலன்களை மேம்படுத்துவதே இப்பேரவையின் நோக்கமாகும்.” (திரு அவைச் சட்டக் கோவை எண் 447)

கத்தோலிக்க திரு அவையின் மேற்படி அதி உயர் ஆவணங்கள் சுட்டிக்காட்டுவது மிகத்தெளிவானது. ஒரு ஆயர் பேரவை எனப்படுவது: குறிப்பிட்ட எல்லையைச் சார்ந்த ஆயர்கள் காலம் மற்றும் இடத்தின் சூழ்நிலைக்கேற்ப தம் எல்லையைச் சார்ந்த மக்களுக்கான பணிகளை முன்னெடுக்க திட்டங்களை உருவாக்கி முன்னெடுக்கும் ஒரு நிலையான அமைப்பாகும்.

இதன் அடிப்படையில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதியானது தமக்கென ஒரு ஆயர் பேரவையை உருவாக்கி வழிநடப்பதற்கான சகல தேவைகளையும் நியாயப்பாடுகளையும் கொண்டுள்ளது.

தமிழில் கூட்டங்களை நடத்தித் திட்டங்களைத் தீட்டி செயற்படுத்தலாமேயென இதயம் ஏங்கிய அனுபவம்

எட்டு ஆண்டுகளாக யாழ்ப்பாண மறை மாவட்டத்தின் அன்பியம், பொது நிலையினர், இளைஞர் ஆணைக்குழுக்களுக்கு இயக்குநராக பணியாற்றியுள்ளேன்.

அக்காலங்களில் பலதடவை மேற்படி குழு உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு கொழும்பு மற்றும் தெற்கின் பல்வேறு பகுதிகளுக்கும் தேசிய ஆணைக்குழுக் கூட்டங்களுக்குச் சென்றுள்ளேன். அக்கூட்டங்களுக்கு வரும் பெரும்பாலானவர்கள் சிங்கள மக்கள்.

கூட்டங்கள் பெரும்பாலும் சிங்கள மொழியிலேயே நடைபெறும். இங்கிருந்து பெரும் சிரமங்கள் மத்தியில் பயணம் செய்து அங்கு செல்லும் நாம் வெறும் பார்வையாளர்களாக இருந்துவிட்டுத் திரும்பிய அனுபவங்களே அநேகம்.

அப்போதெல்லாம் வடக்குக் கிழக்குக்கென தனி ஆயர் பேரவை உருவானால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்; தமிழில் கூட்டங்களை நடத்தி; திட்டங்களைத் தீட்டி செயற்படுத்தலாமேயென இதயம் ஏங்கும். அதற்கான காலம் இப்போது கைகூடி வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகின்றது.

வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தின் முன்னெடுப்புக்கள்

முன்னோடி அமைப்பாகச் செயற்படும் வடக்கு கிழக்கு ஆயர் மன்றம் தனது முதலாவது பகிரங்க வெளிப்படுத்தலாக மே 18 இல் தமிழ் மக்கள் போரில் இறந்த தங்களது உறவுகளை நினைவு கூருவதற்கான உரிமைக்குக் குரல் கொடுத்து இறுதிப் போரில் இடம் பெற்றது .

இனப்படுகொலையே என்பதை வலியுறுத்தியமை பெரும் நம்பிக்கையைத் தந்தது. தொடர்ந்து அவர்கள் அமைதிக்கான ஆய்வு நிலையம் ஒன்றை அமைக்க முன்வந்திருப்பதும் வரவேற்கத்தக்கது.

உண்மை அமைதி நீதியிலேதான் கட்டப்பட முடியும் ஆகவே மேற்படி ஆய்வு நிலையம் நீதி வழியான உண்மைக்கு உழைக்கும் என்பது எமது எதிர்பார்ப்பு.

செய்யக்கூடியவை

மறைமாவட்ட ஆணைக்குழுக்களிடையே அதிகரித்த ஒத்துழைப்பை உருவாக்கல்

இணைந்த செயற்திட்டங்களை முன்னெடுத்தல்

 நிரந்தர செயற்பாட்டு மையமொன்றை பொதுவான பொருத்தமான இடத்தில் உருவாக்கல்

பொதுவான வழிபாட்டுப் பாடல் புத்தகங்களை உருவாக்கல்

 மறையறிவு போட்டிகள் பரீட்சைகளை பொதுவாக நடாத்துதல்

 பண்பாட்டு வடிவங்களைப் பரிமாறிக் கொள்ளுதல்

வளங்களைக் குறிப்பாக மனித வளங்களைப் பரிமாறிக் கொள்ளுதல் ஒரு மொழி பேசும் ஒரே பண்பாட்டைச் சேர்ந்த மக்கள் இவ்வாறு பல விடயங்களில் இணைந்து செயற்பட்டுப் பயன்பெறலாம்.

வடக்கு கிழக்கு ஆயர் பேரவையை நோக்கிய பயணம் உறுதியானதாகவும் நிலைபேறானதாகவும் அமையட்டும்.

குறிப்பு : வடக்கு கிழக்கு ஆயர் மன்றம் தொடப்பாக தம் எண்ணங்களைப் பகிர விரும்புவோர் காலைக்கதிர் கிறிஸ்தவ செய்தி இதழ் - பிசப் சவுந்தரம் மீPடியா சென்றர் இல.891 ஆஸ்பத்திரி வீதி யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US