பிரித்தானியாவின் புதிய உள்துறை அமைச்சராக கிராண்ட் ஷாப்ஸ் நியமனம்
பிரித்தானியாவின் உள்துறை செயலாளராக கிராண்ட் ஷாப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை செயலாளராக பணியாற்றி வந்த சுயெல்லா பிராவர்மேன் பதவி விலகியதை தொடர்ந்து கிராண்ட் ஷாப்ஸ் உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள லிஸ் ட்ரஸ் தலைமையிலான அரசாங்கம் தற்போது பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளது.
நிதிச் சந்தையில் கொந்தளிப்பு
அண்மையில் அறிவிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் பாரிய வரி சலுகை அறிவிக்கப்பட்டது. இதனால் நிதிச் சந்தையில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. வரலாறு காணாத அளவிற்கு பவுண்ட் பெறுமதி சரிவை சந்தித்தது.
இந்நிலையில், நிதி அமைச்சராக இருந்த Kwasi Kwarteng பதவி நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ஜெர்மி ஹன்ட் புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று லிஸ் டிரஸ் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த சுயெல்லா பிரேவர்மேன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்திய வம்சாவளி பெண்ணான இவரது தந்தை கோவாவை சேர்ந்தவர். தாயார் தமிழகத்தை சேர்ந்தவர். இவர் பதவி ஏற்று 43 நாட்களே ஆன நிலையில், பிரதமர் லிஸ் டிரஸ் உடன் நடந்த சந்திப்புக்கு பின் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அரசாங்கம் விழுந்து வருகிறது
தனிப்பட்ட மின்னஞ்சலில் இருந்து அதிகாரப்பூர்வ ஆவணத்தை அனுப்புவதன் மூலம் விதிகளை தொழில்நுட்ப மீறல் செய்துள்ளதாகவும், இப்போது பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் பிரேவர்மேன் கூறினார்.
"நான் தவறு செய்துவிட்டேன்; நான் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன், நான் ராஜினாமா செய்கிறேன்," என்று அவர் பிரதமரிடம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சுயெல்லா பிராவர்மேனின் ராஜினாமாவிற்கு பதிலளித்த தொழிற்கட்சியின் நிழல் உள்துறை செயலாளர் யவெட் கூப்பர், அரசாங்கம் விழுந்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
உள்துறை செயலாளர் மற்றும் நிதி அமைச்சர் இருவரையும் ஆறு வாரங்களுக்குள் நியமித்து பதவி நீக்கம் செய்வது முற்றிலும் குழப்பமான விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 6 மணி நேரம் முன்

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் Cineulagam

பிரித்தானியாவில் அரங்கேறிய பயங்கரம்! வீட்டினுள் வைத்து சுட்டுக்கொலை..பெண் உட்பட இருவர் கைது News Lankasri
