மட்டக்களப்பில் காணி உரிமங்கள் வழங்கி வைப்பு
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் காணி உறுதி வழங்கி வைக்கும் நிகழ்வு வாகரை பிரதேச செயலாளர் எந்திரி ஜீ.அருணன் தலைமையில் இடம் பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நேற்று முன்தினம் (28) நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவில் உதித்த உரிமை வேலைத்திட்டத்தின் கீழ் காணி அனுமதிப்பத்திரங்கள் தேசிய ரீதியில் வழங்கப்பட்டு வரும் நிலையில், வாகரையிலும் காணி உரிமங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அனுமதிப்பத்திரங்கள்
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பங்குபற்றுதலுடன் இடம் பெற்ற நிகழ்வில் 150 காணி பூரண அளிப்புக்களும் 400 காணி அனுமதிப்பத்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜஸ்டினா முரளிதரன், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் பிரத்தியேக செயலாளர் த.தஜீவரன் உள்ளிட்ட ஆளுநரின் உத்தியோகத்தர்கள், பிரதே செயலக உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam