கிரேண்ட்பாஸ் இரட்டை கொலை விவகாரம்: விசாரணையில் வெளியான தகவல்
கொழும்பு - கிரேண்பாஸ் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த சுனிதாவும் அவரது உதவியாளருமே துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரேண்பாஸ், வடுல்லவத்தை பிரதேசத்தில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரே துப்பாக்கிச்சூடு மேற்கொண்டிருந்தனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த பெண்ணொருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த பெண்ணும் முச்சக்கரவண்டியின் சாரதியும் படுகாயங்களுக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில் வெளியான தகவல்
இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான பெண் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (26) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
கே. சுனிதா அல்லது கிராண்ட்பாஸ் குடு சுனிதா என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும்,அவர் மீது ஐந்து துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர் அப்பகுதியில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகவும், யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து தலைமறைவாகியிருந்தாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் முச்சக்கரவண்டி சாரதியான, 31 வயதான கம்புருபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த கே.ஆர். தர்சன என்ற நபர் உயிரிழந்த பெண்ணின் உறவினர் என தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் விற்பனைக்கு இடையூறு
இதேவேளை, துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று காலை ஹொருகொடவத்த பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வியாபாரிகளை காட்டிக்கொடுத்தமை மற்றும் போதைப்பொருள் விற்பனைக்கு இடையூறு விளைவித்ததற்காக உள்ளூர் போதைப்பொருள் வியாபாரிகள் இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

சக்தி படித்த குணசேகரன் மறைத்து வைத்த கடிதம், யார் எழுதியது தெரியுமா, என்ன இருந்தது?.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

திருமணத்தை முடித்த ஜனனிக்கு அடுத்து வந்த ஷாக்கிங் தகவல், என்ன நடக்கும்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
