கிராண்ட்பாஸ் துப்பாக்கி சூட்டில் பெண் மரணம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்
கொழும்பு கிராண்ட்பாஸ், வதுல்லாவத்தை புரதர செவன அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை ஆண் ஒருவரும் பெண்ணொருவரும் குறி வைக்கப்பட்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதில் 32 வயதான கே. ஜி. ஆர். தர்ஷன் என்ற நபர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். அத்துதுடன், ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு
அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக முச்சக்கர வண்டியில் இருந்த பெண் மற்றும் ஆண் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

உயிருக்கு ஆபத்தான காயங்களுக்குள்ளான இருவரும் நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சில நிமிடங்களில் ஆண் உயிரிழந்ததுடன், இன்று அதிகாலை பெண் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண 56 வயதுடைய ஒருகொடவத்தை பிரதேசத்தை சேர்ந்தவராகும்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri