வீட்டிலிருந்து பணியாற்றுவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்! இன்று முதல் நடைமுறை
இலங்கையில் அரச உத்தியோகத்தர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையின்படி, அன்றாட பணிகளை இடையூறு இன்றி மேற்கொள்ள குறைந்தபட்ச அத்தியாவசிய பணியாளர்களை மாத்திரமே நிறுவனத்திற்கு அழைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
கிராம உத்தியோகத்தர்கள் எடுத்துள்ள தீர்மானம்
இந்த நிலையில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கிராம உத்தியோகத்தர்கள் வீட்டிலிருந்து பணி செய்ய தீர்மானித்துள்ளனர்.
இந்த விடயத்தை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.அதுல சீலமானாராச்சி தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களை குறைக்குமாறு அரசாங்கத்திற்கு ஆலோசனை |
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, கிராம உத்தியோகத்தர்கள் வீட்டில் இருந்தவாறு தங்கள் பணிகளைச் செய்ய தீர்மானித்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்காத அரசாங்கம்
அரசாங்கம் கிராம உத்தியோகத்தர்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதன் காரணமாக இன்று முதல் கடமை நிலையத்திற்கு செல்லாமல் வீட்டிலிருந்தவாறு கடமைகளை செய்ய குறித்த சங்கத்தினர் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
