சுவிற்சர்லாந்து பேர்ன் பல்கலைக்கழகத்தின் கற்கைச்சான்றிதழ் அளிக்கும் விழா
சுவிற்சர்லாந்து பேர்ன் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் கட்ட கற்கை தொடங்கப்பெற்று பேர்ன் நகரில் அமைந்துள்ள பல்சமய இல்லத்தில் கற்கைச்சான்றிதழ் அளிக்கும் விழா நடைபெற்றுள்ளது.
சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் சைவநெறிக்கூடத்தின் சார்பில் கற்கை நெறியாளர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பொன்னாடை அளித்து மதிப்பளிக்கப்பட்டுள்ளது.
சுவிற்சர்லாந்தில் தமிழ் மக்களுக்கு தமது தாய்மொழி தமிழில் சமய ஆற்றுப்படுத்தல் கிடைக்க இக்கற்கை வாய்ப்பளித்துள்ளது என முருகருசி சுரேஸ்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
மன்றத்தின் நோக்கு
கடந்த 2021ஆம் ஆண்டு முதன்முதலாக சுவிற்சர்லாந்து சைவத்தமிழ் அருட்சுனையராக சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார், பேர்ன் பல்கலைக்கழகத்தில் சமய ஆற்றுப்படுத்தலில் பட்டம் பெற்றிருந்தார்.
இந்த காலத்தில், ஆற்றுப்படுத்தல் நோக்கத்திற்காக, பல்வேறு மத சமூகங்களின் அமைப்புக்களை ஒன்றுகூட்டி பல்வேறு சமய ஆற்றுப்படுத்தல் மன்றம் 2021இல் பேர்ன் மாநிலத்தில் நிறுவப்பட்டது.
நோய், இறப்பு அல்லது மருத்துவத்தங்குகைகள் ஏற்பட்டால், மக்கள் தங்கள் மத அல்லது ஆன்மீக பின்னணிக்கு ஏற்ப ஆற்றுப்படுத்தல் சேவையினை பெறுவதை இந்த மன்றம் நோக்காக்கிக்கொண்டது.
ஆதரவு திட்டம்
நிறுவனர்களில் ஒருவராக சைவநெறிக்கூடம் அருள் ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலும் உள்ளது.
2017ஆம் ஆண்டில், பேர்ன் நகரில் மூன்று பிராந்திய தேவாலயங்கள் மற்றும் யூத சமூகங்களின் இடைநிலை மாநாடு ஒன்றிணைந்து மருத்துவமனைகளில் கிறிஸ்தவர் அல்லாத மத உறுப்பினர்களுக்கு மத ஆதரவு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த மன்றம் தகுந்த தகையுடைய தோழர்களுக்குப் ஆற்றுப்படுத்தல் பயிற்சி அளித்து, அவர்களின் பணிகளை ஒழுங்கமைத்து, உரிய இழப்பீட்டை உறுதி செய்து மற்றும் அவர்களின் பணியின் தரத்தை உறுதி செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |