புலமைப்பரிசில் பரீட்சையில் யாழில் சாதனை படைத்த மாணவர்கள் (Photos)
2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு நேற்று நள்ளிரவு வெளியாகிய நிலையில் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் சென் ஜோன் பொஸ்கோ ஆரம்ப பாடசாலை மாணவன் யலீபன் யதூசிகன் 191 புள்ளிகளைப் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
பொஸ்கோவில் 216 மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியதில் 154 மாணவர்கள் வெட்டுப் புள்ளியை தாண்டியுள்ளனர்.

இதேவேளை யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில் 217 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியதில் 124 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை தாண்டியுள்ளனர்.
இவர்களில் கிரிதரன் அர்மிதா என்ற மாணவி 186 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
மேலும் யாழ். கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் உருத்திரகுமார் மதுசணன் 186 புள்ளிகள் பெற்றுள்ளார்.
கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் இம்முறை 188 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியதில் 91 மாணவர்கள் வெட்டுப்புள்ளியைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள் - கஜிந்தன்
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam