தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்
2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு கோரி பெற்றோர்கள் சிலரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 16ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
விசாரணை ஒத்திவைப்பு
கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்கள் பரீட்சைக்கு முன்னதாக வெளியில் கசிந்திருந்தன.

இதனையடுத்து பரீட்சையை மீள நடத்துமாறு கோரி பெற்றோர்கள் சிலர் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், இந்த மனு எஸ்.துரைராஜா மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம் வழக்கினை ஒத்திவைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri