தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்
எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத மாணவர்கள், அந்தந்தப் பகுதிகளில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையங்களுக்கு அறியப்படுத்துமாறு பரீட்சை திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், புலமைப்பரிசில் பரீட்சையை சுமுகமாக நடத்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் ஒத்துழைப்பை எதிர்ப்பார்த்துள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் எச்.ஜே.எம்.சி ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள்
நாட்டில் நிலவும் காலநிலை அனர்த்தங்களால் சில மாவட்டங்களில் உள்ள மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அது தொடர்பிலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் குறித்தும் தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.
எனவே, அனர்த்த முகாமைத்துவ மையத்துடன் இணைந்து, பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் எச்.ஜே.எம்.சி ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
