பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை(Video)
சுவாசக்குழாய் தொற்று உள்ள சிறு குழந்தைகளுக்கு கண் நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் கண் நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் ஹிரண்ய அபேசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் கொழும்பு பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளில் குழந்தைகளுக்கு கண் நோய் பரவியது.
உலக பார்வை தினத்தை முன்னிட்டு நேற்று கண் வைத்தியசாலையில் நடைபெற்ற மாநாட்டில் வைத்தியரிடம் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்
பொதுவாக சிறு குழந்தைகளுக்கு மூச்சுக்குழாய் தொற்று காரணமாக கண் நோய்கள் பரவுவதாகவும், மூன்று நாட்களுக்கு மேல் இந்நோய் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கண்கள் சிவப்பாக இருந்தால், கண்களில் இருந்து நீர் வெளியேற்றம் அதிகமாக இருந்தால், பெற்றோர்கள் கவனம் செலுத்தி, பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமல், வீட்டிலேயே தங்க வைத்து, மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலையொன்றில் இவ்வாறான அறிகுறிகளுடன் கூடிய மாணவர்கள் இருந்தால் உடனடியாக நோயுற்ற மாணவர்களை ஏனையவர்களிடம் இருந்து பிரித்து வைப்பது மிகவும் அவசியமானது என விசேட வைத்தியர் ஹிரண்ய அபேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த கண் நோய் குறித்து பெற்றோர்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
