தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு
2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள், மதிப்பீடு ஆரம்பித்து 40 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர(Amith Jayasundara) தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு இன்று(08) ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம்(Department of Examinations) முன்னர் அறிவித்திருந்தது.
இதன்படி, விடைத்தாள் திருத்தும் செயல்முறை இன்று(08) முதல் ஜனவரி 12ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
விடைத்தாள் மதிப்பீடு
மதிப்பீடுகள் நிறைவடைந்த 40 நாட்களுக்குள் பெறுபேறுகளை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்றது.
244,092 மாணவர்கள் சிங்கள மொழி மூலமும், 79,787 மாணவர்கள் தமிழ் மொழி மூலமும் என மொத்தம் 323,879 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
முன்னதாக இந்த பரீட்சை வினாத்தாளில் மூன்று வினாக்கள் வெளியில் கசிந்தமை தொடர்பில் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், இது தொடர்பில் பெற்றோர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் விமர்சனம் வெளியிட்டு போராட்டங்களை நடத்தியிருந்ததுடன், நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri